மீன் உருவில் ஏலியனா? வைரலாகும் புகைப்படம்…

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ட்ரூ லாம்பெர்ட். இவர் கடந்த ஏப் 5ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள போண்ட்டி கடற்கரை பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கரைகரையில் மீன் ஒன்று ஒதுங்கியுள்ளதை பார்த்துள்ளார். அருகில் சென்று பார்த்த போது அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. அந்த மீன் பார்க்க வித்தியாசமாக இருந்துள்ளது.

இதுவரை அவரது வாழ்வில் அப்படி மீனை பார்த்தது இல்லை. பார்க்க மீனின் வாய் மனித வாய் போலவும், மீனின் உடல் சுறா மீன் போலவும் இருந்துள்ளது. இதை கண்ட அவர் ஆச்சரியத்தை அந்த மீனை தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து இந்த மீன் வித்தியாசமானதாக இருப்பதாகவும் இது ஏலியன் மீனா? அல்லது இந்த மீன் குறித்து யாருக்காவது தெரியுமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவு வைரலானது. பலர் இந்த பதிவை பகிர்ந்து ஏலியன்கள் மீன் உருவில் பூமிக்குள் நுழைவதாக பேசினர்.News & image Credit: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!