ரஷிய வீரரின் இழிவான செயல்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ!

உக்ரைனில் ரஷியா 46வது நாளாக போர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக புச்சா நகரில் அப்பாவி மக்கள் 400 பேரை ரஷ்ய வீரர்கள் துன்புறுத்தி கொடூரமாக கொன்றனர்.

அவர்களின் உடல்கள் கொத்து கொத்தாக புதைக்கப்பட்டது. இந்நிலையில் தடயவியல் புலனாய்வாளர்கள் புச்சாவில் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுக்கும் பணியை மேற்கொண்டனர்.அந்த உடல்கள் கருப்பு ப்ளாஸ்டிக் கவரில் போர்த்திபடி வெளியில் வைக்கப்பட்டது. முதல் 20 உடல்களை தோண்டி எடுக்கும் போதே தடயவியல் நிபுணர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

ஏனெனில் அதில் அனைவர் உடலிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தது. இறந்தவர்களில் இரண்டு பெண்கள் அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

மற்றொருவரின் விரல் நுனிகள் கருப்பு நிறமாக மாறியிருந்தது. ஒரு பெண்ணின் மண்டை ஓட்டின் ஒரு பெரிய பகுதியைக் காணவில்லை, மற்றொரு உடல் மிகவும் மோசமாக எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அவரது தலை மற்றும் அவரது உடற்பகுதியில் பாதி மட்டுமே இருந்தது.

அப்பகுதியில் தொடர் மழை பெய்வதால் உடல்களை தோண்டி எடுக்கும் பணி அவ்வபோது தடைபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ரஷிய வீரர் ஒருவர் தமது சக வீரர்களுக்கு பகிர்ந்த வீடியோ ஒன்று, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த வீடியோவால் அந்த வீரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இத்தகவல் உண்மையாக இருந்தால், சமீபத்தில் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஷியாவின் அருவருக்கத்தக்க செயலாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் டெலிகிராம் சமூக ஊடகத்தில் அந்த வீரரால் தமது சக வீரர்களுக்கு பகிரப்பட்டுள்ளது. உக்ரைன் தரப்பிலும் இந்த சம்பவம் உறுதி செய்யப்படவே, ரஷியா நிர்வாகம் அந்த வீரரை கைது செய்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைனின் இர்பின், டைமர்கா, மரியுபோல் மற்றும் புச்சா பகுதிகளில் ரஷிய ராணூவம் காட்டுமிராண்டித்தனமான போக்கை குறும்படமாக காண்பித்தார், அதில் மொத்தமாக எரிந்த சடலங்கள், கை கால்கள் துண்டிக்கப்பட்ட உடல்கள், சிறார்கள் உட்பட சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சடலங்கள் என பதிவாகியிருந்தது.News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!