25 ஆண்டுகளாக கலக்கிய பெண் சாராய வியாபாரி அதிரடி கைது!

கள்ளச்சாராயம் சப்ளை செய்து சுமார் 25 ஆண்டுகளாக தீவிரமாக கொடிகட்டி பறந்து வந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மகேஸ்வரியின் கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர், இந்திரா நகர், லாலா ஏரி உள்ளிட்ட பகுதிகளிலும், வாணியம்பாடியில் உள்ள 36 வார்டுகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.

கள்ளச்சாராயம் சப்ளை செய்து சுமார் 25 ஆண்டுகளாக தீவிரமாக கொடிகட்டி பறந்து வந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மகேஸ்வரியின் கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இதனை எதிர்த்து பொதுமக்கள் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவின்பேரில், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் குழுவினர் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, நேதாஜி நகர் பகுதியில் வீடு, வீடாகவும், பிற இடங்களில் பல்வேறு வகையில் இந்த சாராய கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், இன்று காலையில் திருவண்ணாமலையில் சாராய கும்பல் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் திருவண்ணாமலையில் கும்பல் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பிரபல கள்ளச்சாராய வியாபாரி மகேஸ்வரி அவரது கணவர் சீனிவாசன், தேவேந்திரன், உஷா, சின்னராஜ், மோகன் மற்றும் இவர்கள் தங்குவதற்கு வீடு கொடுத்த ஒரு பெண்மணி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தையே கலக்கி வந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி கைது செய்யப்பட்டிருப்பது போலீசார் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது, மகேஸ்வரி மீது ஏற்கனவே இவர் மீது 8 முறை குண்டர் சட்டம், சுமார் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் இடைவிடாமல் தொடர்ந்து கள்ளச்சாராயம் நடத்தி வருகிறார்.

இவரிடம் 100-க்கும் மேற்பட்ட ஆட்கள் பணிபுரிவதால், இவரது கள்ளச்சாராய வியாபாரத்தையும் போலி மது பாட்டில்கள் விற்பனை செய்வதையும் முழுமையாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!