ஜொமேட்டோவில் ஒருநாள் வேலை பார்த்த ஐடி ஊழியர்..!

அவர் ஜொமேட்டோ ஊழியர்கள் படும் கஷ்டங்களை விரிவாக லிங்கடின் இணையதளத்தில் எழுதியுள்ளார். அந்த பதிவு பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஜெயராமன் என்ற ஐடி ஊழியர் ஒருவர் ஜொமேட்டோ நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் வேலையை இரண்டு நாட்கள் பார்த்து, அதன் அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக ஜொமேட்டோ உணவு டெலிவரி ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனை ஏராளமாக இருக்கிறது. சரியான கழிப்பிடம் இல்லாமை, உணவு டெலிவரி செய்ய தாமதமானால் சந்திக்கும் சிக்கல்கள் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்ள ஜெயராமன் முயன்றுள்ளார்.

இரண்டு நாட்கள் வேலை பார்த்த அனுபவத்தில் அவர் கூறியதாவது:-

உணவு டெலிவரி செய்யப்படும் செயலியில் காட்டப்படும் கடைகளும், ஆர்டர் கொடுத்தவரின் வீடு இருக்கும் இடமும் துல்லியமாக காட்டப்படாது. அதேபோல ஒரே உணவகத்தில் இருந்து பல ஆர்டர்கள் வரும்போது அனைத்து ஆர்டர்களையும் சரியான நேரத்தில் டெலிவரி செய்வதும் கஷ்டம். சில ஆர்டர்கள் 14 கி.மீ தூரத்தில் கூட இருக்கும்.

அருகில் இருந்த இடத்தில் ஆர்டர் டெலிவரி செய்வதற்கே 20 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கிறது. அதேபோல உணவகங்கள் கொடுக்கும் வாடிக்கையாளர் போன் நம்பர்களுக்கும் சரியாக எடுப்பதில்லை. 14 கி.மீ தூரம் செய்து டெலிவரி கொடுத்த உணவில் இருந்து ரூ.10 தான் எனக்கு டிப்ஸ் கிடைத்தது. சிலர் 20-25 கி.மீ தூரம் வரை கூட சென்று உணவு டெலிவரி செய்கின்றனர்.

ஜொமேட்டோ ஊழியர்களுக்கு நீண்ட தூரம் ஆர்டர் கொடுப்பதை அந்நிறுவனம் நிறுத்த வேண்டும். அதற்கு தாமதமானால் அவர்களை கண்டிக்க கூடாது.

இவ்வாறு ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

அவர் ஜொமேட்டோ ஊழியர்கள் படும் கஷ்டங்களை விரிவாக லிங்கடின் இணையதளத்தில் எழுதியுள்ளார். அந்த பதிவு பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!