11 வயதில் தூங்கி 9 வருடங்கள் கழித்து எழுந்த ஒரு பெண்ணின் கதை!

மீண்டும் எலன் இப்படி தூங்கிவிடுவாரோ என்று பயப்படாமல், எலன் தனது திருமணம் செய்து கொண்டார்.

11 வயதில் தூங்கி 9 வருடங்கள் கழித்து எழுந்த ஒரு பெண்ணின் கதை தெரியுமா, நம்பமுடியாதது, டிரிபனோசோமியாசிஸ் அல்லது தூக்க நோயால் பாதிக்கப்பட்ட முதல் சிறுமி இவர் ஆவார்.

இங்கிலாந்தில் மே 15, 1859 அன்று 12 குழந்தைகளைக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தார் எலன் சாட்லர் . 11 வயதாக இருந்த எலன் சாட்லருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டது. எலனின் தந்தை வில்லியம் சாட்லர் ஒரு விவசாயி, அவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். எலனின் தாய் அன்னே சாட்லர் தாமஸ் பிரீவன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

1871 ஆம் ஆண்டு வரை, 11 வயதான எலனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மார்ச் 29 அன்று, அவள் தூங்கினாள், ஆனால் எழுந்திருக்கவில்லை அவரை பலரும் எழுப்பிப் பார்த்தனர் பயனில்லை.

இந்த தகவல் காட்டுத் தீயாகப் பரவியது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் எலன் வீட்டுக்கு வந்து அவரை எழுப்ப முயற்சித்தனர். எதுவும் பலனளிக்கவில்லை.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் உறக்கத்திலிருந்து எழுப்ப மூளைக்குத் தேவையான ஒரெக்சின் என்ற வேதிப்பொருள் உருவாகவில்லை. அதனால்தான் அவர் கண்விழிக்கவில்லை என்பதை மட்டுமே கண்டறிந்தனர். ஆனால் கண் விழிக்க வைக்க ஒரு உபாயமும் இல்லை.எலன் தூங்கும் பெண்ணாக பிரபலமடைந்தார்.

எலனின் தாய் ஒரு சிறிய டியூப் மூலம் அவருக்கு கஞ்சி, பால் மற்றும் மதுவை ஊட்டி வந்தார். தூங்கும் ஒருவருக்கு உணவளிப்பது மிகவும் கடினம். எலனின் தாடைகளில் ஒன்று பூட்டப்பட்டதால் இந்தப் பிரச்சினைகள் தீவிரமடைந்தன. அவருடைய தாயார் எலனின் பற்களின் சிறிய இடைவெளி மூலம் உணவளிப்பார்.

இப்படியே நாட்கள் அல்ல ஆண்டுகள் சென்றன. ஒரு நாள் 1880ஆம் ஆண்டு எலனின் 21-வது வயதில் அவர் திடீரென உறக்கத்தைக் களைத்தார். ஆனால் அவரது தாய் அதற்கு முன்பே காலமாகியிருந்தார்.

மீண்டும் எலன் இப்படி தூங்கிவிடுவாரோ என்று பயப்படாமல், எலன் தனது திருமணம் செய்து கொண்டார். ஒரு விவசாயியை திருமணம் செய்து கொண்டு 6 பிள்ளைகளுக்குத் தாயானார். 1901ஆம் ஆண்டு அவர் காலமானார். அவரது பிள்ளைகளில் ஒருவர் திமாரு ஹெரால்ட் என்பவர் தனது தாயைப் பற்றிய இந்த தகவலை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அது வைரலாகியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!