உக்ரைன் போர்க்களத்தில் ‛ஸ்னைப்பர் வாலி’

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உலகின் அபாயகரமான துப்பாக்கிச்சுடும் வீரராக கருதப்படும் ‛ஸ்னைப்பர் வாலி’(sniper Wali) உக்ரைனுக்கு ஆதரவாக களமாடி வருகிறார்.

ரஷ்ய ராணுவத்துடன் ஒப்பிட்டால் உக்ரைன் ராணுவம் மிகவும் சிறியது. இதனால் உக்ரைனுக்கு உதவி செய்யும்படி சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இதனை ஏற்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதி உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக கனடா ராணுவத்தின் 22வது படைப்பிரிவின் முன்னாள் வீரரான ‛ஸ்னைப்பர் வாலி’ களமிறங்கி உள்ளார்.


40 வயதாகும் இவர் இயல்பில் இரு கணினி மென்பொறியாளராவார். 2009 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இரண்டு முறை ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றுள்ளார். தொலைவில் இருந்து எதிரிகளை குறிபார்த்து சுட்டு வீழ்த்துவதில் வல்லவரான இவர், உலகின் அபாகரமான ஸ்னைப்பராக கருதப்படுகிறார். ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது அரபு மொழியில் பாதுகாவலர் என பொருள்படும் “வாலி” என்ற பெயரைப் பெற்றார். ஆப்கானிஸ்தானை தவிர சிரியா, ஈராக் போர்களிலும் வாலி பங்கேற்றுள்ளார்.

2017-ம் ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போரில் ஒரு பயங்கரவாதியை 3,450 மீட்டர் (சுமார் மூன்றரை கி.மீ) தொலைவில் இருந்து சுட்டு வீழ்த்தினார். இவரால் ஒரு நாளைக்கு 40 வீரர்களை சுட்டு வீழ்த்த முடியும் என கூறப்படுகிறது. ஒரு நல்ல ஸ்னைப்பரால் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 பேரை சுட்டுவீழ்த்த முடியும். அதுவே சிறந்த வீரர் என்றால் 8 முதல் 10 பேரை மட்டுமே சுட முடியும்.

அண்மையில் உக்ரைன் ராணுவத்தில் இணைந்த இவர் இதுவரை 6 ரஷ்ய வீரர்களை சுட்டு வீழ்த்தியுள்ளார். உலகின் அபாயகரமான ஸ்னைப்பர் வீரர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளது அங்கு ஊடுறுவி வரும் ரஷ்யர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: zeenews * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!