இலங்கை அமைச்சர்களுடன் டானியல் ரொசென்பிளம் பேச்சு…!


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் டானியல் ரொசென்பிளம் சிறிலங்கா வந்துள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதம், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலராக நியமிக்கப்பட்ட டானியல் ரொசென்பிளம் நேற்று முதல்முறையாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

அவர் கொழும்பில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்து இதன்போதே பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம், மற்றும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரையும் சந்தித்து, சிறிலங்கா- அமெரிக்க உறவுகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா – அமெரிக்கா இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆவது ஆண்டு நிறைவுபெறும் நிலையிலும், முக்கியத்துவம் மிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ள நிலையிலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர சிறிலங்காவின் பயணத்தை மேற்கொண்டுள்ளார். – Source: puthinappalakai.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!