தெரு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கம்பம் மக்கள்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்லமாக அழைத்து விளையாடிய தெரு நாய் இறந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு அருகே சாந்தன் பாறை, தொட்டிக்கானம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறிய குட்டியாக ஒரு தெரு நாய் வந்தது. அந்த நாய்க்கு ஜிம்மி என பெயர் வைத்து பொதுமக்கள் அழைத்து வந்தனர்.

அப்பகுதி மக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு அதே தெருவில் 24 மணி நேரமும் சுற்றி காவல் காத்து வந்தது. வேறு பகுதிக்கு செல்லாமல் அப்பகுதி மக்களுடன் செல்லமாக வளர்ந்த ஜிம்மி நேற்று திடீரென இறந்தது.

இதனையடுத்து அந்த நாயை பொதுமக்கள் தூக்கிச் சென்ற அடக்கம் செய்தனர். மேலும் தெரு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து அப்பகுதி முழுவதும் ஒட்டினர்.

தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்லமாக அழைத்து விளையாடிய ஜிம்மி இறந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!