ரஷியா நடத்துவது ஆக்கிரமிப்பு போர் – உக்ரைன் ஆவேசம்!

ரஷியாவின் ஆக்கிரமிப்பு போரில் இருந்து உக்ரைன் தன்னை தற்காத்து கொள்ளும் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்க உத்தரவிட்டுள்ள நிலையில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கியூ மற்றும் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது.

ரஷியாவின் ராணுவ படைகள் உக்ரைன் எல்லையில் நுழைய தொடங்கின. கார்கிவ் நகரை நோக்கி ரஷிய ராணுவ படைகள் முன்னேறுகின்றன.

இந்நிலையில் ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது:- ரஷியா தாக்குதல் நடத்துவது ஆக்கிரமிப்பு போர். ரஷியாவின் ஆக்கிரமிப்பு போரில் இருந்து உக்ரைன் தன்னை தற்காத்து கொள்ளும் என அவர் கூறினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!