கடலில் விழுந்த ஹெலிகாப்டர் – குளித்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் ஓட்டம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரையை ஒட்டிய பகுதியில், வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரையை ஒட்டிய பகுதியில், வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் கடலில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளான ராபின்சன் ஆர்44 ஹெலிகாப்டரில் மொத்தம் 3 பேர் பயணம் செய்துள்ளனர்.

மியாமி கடற்கரை பகுதியில் பொதுமக்கள் ஜாலியாக பொழுதை கழிப்பது வழக்கம். அங்கு குளிப்பதும் கடலில் நீந்துவதும் என இருந்தவர்கள் திடீரென வானத்திலிருந்து கடலில் விழுந்த ஹெலிகாப்டரை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மியாமி கடற்கரை போலீசார், ஹெலிகாப்டரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மொத்தம் மூன்று பேர் பயணம் செய்த அந்த ஹெலிகாப்டரில், ஒருவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பித்தார். நேற்று மதியம் இந்த விபத்து நடந்தது. மற்ற இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அவர்களும் நலமுடன் இருக்கின்றனர்.

இந்த விபத்து தண்ணீரில் நிகழாமல் தரையில் நிகழ்ந்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும்” என்று தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!