78 முறை பரிசோதனையிலும் கொரோனா உறுதி… தனிமையில் தவிக்கும் நபர்!

துருக்கியை சேர்ந்த முசாபர் கயாசன் முதன்முறையாக நவம்பர் 2020 இல் கொரோனா பரிசோதனை செய்தார். அதிலிருந்து அவர் கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் வைக்கப்பட்டு 14 மாதங்களாக தனிமைப்படுத்தப்பட்டு வந்தார்.

நவம்பர் 2020 இல் அவர் முதன்முதலில் கொரோனா தொற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டது, ​​அப்போது கயாசனுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன, அவை விரைவில் குணமடைந்தன, ஆனால் அதன் பின்னர் அவரது பரிசோதனை அறிக்கைகளில் அவருக்கு கொரோனா தொற்று குணமானதாக தெரியவில்லை.

வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த கொரோனா தொற்றக்குள்ளான நபரை தனிமைப்படுத்துவது முக்கியம் என்பதால், கயாசனால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியவில்லை, நண்பர்களை கூட சந்திக்க முடியவில்லை.

ஒரு ஜன்னலின் உதவியுடன் மட்டுமே அவர் தனது குடும்பத்தினருடன் உரையாட முடிந்தது. தனிமைப்படுத்தலில் இருக்கும் போது அவருக்கு இருக்கும் மிகப்பெரிய துக்கம், தன் அன்புக்குரியவர்களைத் தொட முடியாததுதான். கயாசனுக்கு ஒரு முறை கூட தொற்று குணமாகவில்லை என்பதால், அவரால் கொரோனா தடுப்பூசியும் போட முடியவில்லை.

மருத்துவர்கள் கூறுகையில், “கயாசன் ஒரு வகை இரத்த புற்றுநோய் நிரந்தர நோயாளி. இந்த நோய் நோயாளியின் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கடுமையாக பாதிக்கும். இந்த நோய் கயாசனின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துள்ளது, எனவே கொரோனா தொற்று அவரின் இரத்தத்தில் இருந்து நீங்கவில்லை. அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை மருத்துவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும், செயல்முறை மிகவும் மெதுவாக உள்ளது”. என்று கூறினர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!