மருமகளின் உயிரை காப்பாற்ற மாமனார் செய்த நெகிழ்ச்சி காரியம்!

மருமகளின் உயிரை காப்பாற்ற மாமனாரே தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நிகழ்வு மக்களிடையே நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர், உடலில் ஆங்காங்கே வீக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவரை அணுகி பரிசோதனையில் ஈடுபட்டபோது, பெண்ணுக்கு சிறுநீரகம் செயலிழந்தது தெரியவந்துள்ளது.

மேலும், பெண்ணுக்கு சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பெண்ணுக்கு ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அறுவை சிகிச்சையும் தள்ளிவைக்கப்பட்டது.

சிறுநீரகம் தானமாக வழங்க யாரும் கிடைக்காததால், இறுதியில் பெண்ணின் மாமனாரே தனது ஒரு சிறுநீரகத்தை மருமகளுக்கு தானமாக வழங்க முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து, பெண்ணுக்கு மாமனாரின் சிறுநீரகத்தை கொண்டு கடந்த பிப்ரவரி 2-ம் தேதி அன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

மருமகளின் உயிரை காப்பாற்ற மாமனாரே தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நிகழ்வு மக்களிடையே நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!