கார் விபத்தில் சிக்கிய நபர்… கைகளில் தூக்கி சென்ற நடிகர் சோனு சூட்!

பாலிவுட் நடிகர் சோனு சூட், கார் விபத்தில் சிக்கிய நபரை தனது கைகளில் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

பஞ்சாப் மாநிலம் மோகா அருகே உள்ள பைபாஸ் சாலையில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த நடிகர் சோனு சூட், விபத்துக்குள்ளான காரின் இருக்கையில் சிக்கி கொண்ட ஓட்டுநரை பக்குவமாக மீட்டு தன் காருக்கு தூக்கி சென்றார்.

காயமடைந்த அந்த நபரை தன் மடியில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!