சிறுவனைக் கொலை செய்த வழக்கு… இளைஞரின் வாக்கு மூலத்தால் அதிர்ச்சியடைந்த நீதிபதி…!


பீகாரில் வறுமையின் காரணமாக சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வந்த இளைஞர், ஜெயிலில் இலவச சாப்பாடு கிடைக்கும் என்பதால், 9 வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் சகார்சா மாவட்டத்தின் சிக்னிடோலா கிராமத்தை சேர்ந்த 17 வயது இளைஞரான அவனிஷ் குமார், அதே கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவனான சுர்பின் குமாரை கொலை செய்தான்.

இதனால் பீகார் போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தந்தையை இழந்த அந்த இளைஞர் வறுமையில் வாடி வந்துள்ளார். சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். மேலும் வயிற்றுப் பிழைப்பிற்காக கடினமான வேலைகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஜெயிலுக்கு போனால் தங்க இடமும், உண்ண உணவும் இலவசமாக கிடைக்கும் என்று கருதிய இளைஞர், அப்பகுதியில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு 9 வயது சிறுவனை மனசாட்சியில்லாமல் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான்.

இவ்வாறு அவன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். வறுமையினால் இலவச சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!