மூதாட்டியின் உடலை புதைக்க முடியாமல் 30 மணி நேரம் தவித்த கிராம மக்கள்!

வெள்ளனூர் கிராமத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி பேபிகுமாரி என்பவர் உடல் நலக்குறைவால் 29-ந் தேதி காலை இறந்து போனார். இதையடுத்து அவரது உடலை எங்கு புதைப்பது என்று தெரியாமல் கிராம மக்கள் தவித்தனர்.

ஆவடி அருகே உள்ளது வெள்ளானூர் கிராமம். இங்கு வசிப்பவர்கள் இறந்தால் அவர்களது உடல், அருகே உள்ள ஏரிக்கரையோரத்தில் புதைக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏரி முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதனால் இறந்தவர்களின் உடல்களை மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரத்தில் எரித்து வந்தனர். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு உடல்களை எரிக்க கூடாது என்று உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் வெள்ளனூர் கிராமத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி பேபிகுமாரி என்பவர் உடல் நலக்குறைவால் 29-ந் தேதி காலை இறந்து போனார். இதையடுத்து அவரது உடலை எங்கு புதைப்பது என்று தெரியாமல் கிராம மக்கள் தவித்தனர்.

அருகே உள்ள மற்றொரு சுடுகாட்டில் உடலை புதைக்க ஏற்பாடு செய்த போது இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேபிகுமாரியின் உடலை என்ன செய்ய என்று தெரியாமல் 30 மணி நேரத்திற்கும் மேலாக தவித்தனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவுபடி ஆவடி வட்டாட்சியர், போலீஸ் உதவி கமி‌ஷனர் சத்யமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் விஜயராகவன், ராஜு பிரின்ஸ் ஆரோன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக வெள்ளனூர் கிராமத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது இறந்தவர்களின் உடலை புதைக்க நிரந்தரமாக சுடுகாட்டு இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நில அளவையர் உடனடியாக வரவழைக்கப்பட்டு ஏரிக்கு அருகே சுடுகாடு நிலம் அளந்து கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர் அங்கேயே பேபிகுமாரியின் உடல் புதைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!