மருமகனுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்த மாமியார்… திடுக்கிடும் தகவல்கள்!

நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளை செயலாளர் கொலையில் நாடகமாடிய மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

பாப்பாக்கோவிலை சேர்ந்த விசிக கிளை செயலாளரான ராஜ்குமார் கடந்த 14-ம் தேதி அவரது மாமியார் வீட்டு முன்பு உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு ராஜ்குமாரின் மனைவி மற்றும் மாமியாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மகள் அனுசுயாவை மருமகன் ராஜ்குமார் சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்ததால், ஆத்திரமடைந்த தாய், மகளுடன் சேர்ந்து மருமகனுக்கு உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொன்று விட்டு, தீ வைத்து எரித்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.- source: malaimurasu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!