ஆசைகாட்டி ஆன் லைன் மோசடி.. பணத்தை இழந்த முழு கிராம மக்கள்!

செயலியில் முதலில் 500 ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்ட பணம் அடுத்த நாள் இரட்டிப்பாகி வந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள கட்மூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு, ஒரு நிறுவனத்தின் பேரில் வாட்ஸ்-ஆப் மூலம் மொபைல் செயலிக்கான லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்த போது, அந்த செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அதில் இருந்துள்ளது.

இதனை நம்பி சிலர் அதில் 500 ரூபாய் வரை முதலீடு செய்தனர். அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணம் அடுத்த நாள் இரட்டிப்பாகி வந்துள்ளது. இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. உடனே இதை நம்பி அந்த செயலியில் ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் இந்த முறை முதலீடு செய்யப்பட்ட பணம் திரும்ப வரவில்லை.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்து இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!