காரின் வெள்ளை நிற பிளேட்டால் சிக்கிய ராஜேந்திர பாலாஜி – ஆச்சரியமூட்டும் தகவல்!

கடந்த 18 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜியை போலீசார் கர்நாடகாவில் வைத்து கைது செய்தனர்.


போலீசாரிடம் சிக்காமல் இருக்க ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதனையொட்டி உள்ள கர்நாடகா எல்லை பகுதியில் அடர்ந்த மலைச்சார்ந்த கிராம பகுதிகளை தேர்ந்தெடுத்தார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றால் சுங்கசாவடியில் போலீசார் பிடித்து விடுவார்கள் என நினைத்த அவர் அந்த சாலைகளை தவிர்த்து விட்டு கிராமங்கள் உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள ரோடுகளை அவர் தேர்ந்தெடுத்தார்.

இந்த வழியாக அவர் காரில் சுற்றிக்கொண்டு தலைமறைவாக திரிந்தார். இந்த சூழ்நிலையில் தான் அவர் ஓசூர் மற்றும் கர்நாடகா பகுதிகளில் காரில் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போலீசார் கர்நாடகா போலீசாரின் உதவியை நாடி ராஜேந்திர பாலாஜியை பிடிக்க புது வியூகம் அமைத்தனர்.

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் ராஜேந்திர பாலாஜியை தேடும் முயற்சியை தீவிரப்படுத்தினார்கள். இதையறிந்த ராஜேந்திர பாலாஜி நேற்று முன்தினம் ஓசூரில் இருந்து கர்நாடகா சென்றார்.

அவரது செல்போன் சிக்னலை ஆராய்ந்த போலீசார் அவர் கர்நாடகத்துக்குள் நுழைந்தததை உறுதி செய்தனர். ஆனால் அவரது செல்போன் சிக்னல் கிடைக்காததால் அவரை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது.

ராஜேந்திர பாலாஜி வெள்ளை நிற காரில் பயணம் செய்தார். அவர் சென்ற காரின் பின்புற சக்கரத்தில் இருந்த வெள்ளை நிற பிளேட் மாயமாகி இருந்தது. இதனை அவர் கவனிக்கவில்லை. ஹசன் மாவட்டம் சைகிலேஷ்பூர் பகுதியில் கார் சென்ற போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ராஜேந்திர பாலாஜி சென்ற காரின் பின்புற சக்கரத்தில் இருந்த வெள்ளை நிற பிளேட் மாயமானதை பார்த்தனர். உடனே அந்த காரை போலீசார் நிறுத்தினார்கள்.

அப்போதுதான் அந்த காரில் ராஜேந்திர பாலாஜி இருந்தது தெரிய வந்தது. அவர் நண்பர் வீட்டுக்கு தப்ப முயன்றதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போதுதான் போலீசில் அவர் சிக்கியுள்ளார். இதனால் அவரது தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!