குளத்தில் ‘டைவ்’ அடித்த நடிகை.. கழுத்து உடைந்த பரிதாபம்!

தனக்கு 2022-ஆம் ஆண்டு சிறப்பாக அமையவில்லை என வருத்தம்.

ஆஸ்திரேலிய நடிகையான அல்லி சிம்ப்சன், ஆழம் அதிகம் இல்லாத ஒரு குளத்தில் ‘டைவ்’ அடித்தபோது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்து உடைந்துபோனது.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் தான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம் என்றும், 4 மாதங்களுக்கு கழுத்தில் பட்டை அணிய வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்தார். சிகிச்சையில் இருந்தவாறு அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

தற்போது குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அவர், தனக்கு 2022-ஆம் ஆண்டின் தொடக்கம் சிறப்பான முறையில் அமையவில்லை என்றும் அவர் கூறினார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!