இசைப்புயலின் மகளை திருமணம் செய்யும் நபர் யார் தெரியுமா?

ஏ.ஆர்.ரகுமானுடைய மகளின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்று செய்தி வெளியானது இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.


இந்திய சினிமாவையே தன்னுடைய இசையின் மூலம் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கார் நாயகனாக அறியப்படும் இவர் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல், விக்ரம் நடிக்கும் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களுக்கு இசையமைக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதிக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என இரு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளான கதீஜா ரகுமானுக்கும் ஆடியோ இன்ஜினியர் ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுக்கும் கடந்த டிசம்பர் 29 அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இடம்பெற்ற புதிய மனிதா பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியாசுதீன் ஷேக் பற்றி பலரும் எதிர்பார்த்திடாத ஆச்சர்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


அதாவது இவர் ஒரு சவுண்ட் இன்ஜினியர் என்றும், இவர் பல பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார். குறிப்பாக தன்னுடைய வருங்கால மாமனாரான, ஏஆர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளாராம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!