ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதுங்கலா?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் அவரது உதவியாளர்களிடம் ராஜேந்திரபாலாஜி அடிக்கடி போனில் பேசுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அவரது முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களூரு, ராஜேந்திர பாலாஜியின் செல்போன் எண்களை தொடர்ந்து தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கோடியூரைச் சேர்ந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறை நகர செயலாளர் ஏழுமலை திருப்பத்தூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன் ஆகியோர் ராஜேந்திரபாலாஜியிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட போலீசார் நேற்று அதிகாலை ஏழுமலை, விக்னேஸ்வரன் ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் அவரது உதவியாளர்களிடம் ராஜேந்திரபாலாஜி அடிக்கடி போனில் பேசுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ராஜேந்திர பாலாஜி தப்பிச்செல்ல இவர்கள் உதவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் முன்னாள் அமைச்சர் வீரமணியின் செல்போன் உரையாடல்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆந்திராவில் விஜயவாடா பகுதிகளில் திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பகுதிகளில் ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அங்கு தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் ஏழுமலை விக்னேஸ்வரன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!