தடுப்பூசி போட மறுத்து மரத்தில் ஏறிய வாலிபர்… கெஞ்சிய காதாரத்துறை ஊழியர்கள்!

வில்லியனூர் அருகே தடுப்பூசி போட மறுத்து வாலிபர் மரத்தில் ஏறிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தடுப்பூசி

புதுச்சேரியை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி போடாதவர்களையும் கண்டறிந்து தடுப்பூசி போடப்படுகிறது. இந்தநிலையில் வில்லியனூரை அடுத்த கோனேரிகுப்பத்தில் கூடப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பூங்குழலி தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மரத்தில் ஏறிய வாலிபர்

அப்போது அப்பகுதியை சேர்ந்த முத்துவேல் (வயது 35) என்பவர் தடுப்பூசி போட மறுத்து, அங்குள்ள மரத்தில் ஏறிக்கொண்டார். தடுப்பூசி போட கீழே இறங்குமாறு சுகாதாரத்துறையினர் கெஞ்சினர்.
இருப்பினும் அவர் இறங்க மறுத்து அடம் பிடித்தார். இதனால் ஏமாற்றத்துடன் ஊழியர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!