இளமையான தோற்றத்தை தக்கவைக்க வீட்டிலேயே செய்யலாம் பேஸ் பேக்!

புரதச்சத்து நிறைந்த பாலில் அமினோ அமிலங்கள், கோலாஜன் போன்றவையும் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் சரும அழகை மேம்படுத்த உதவும்.


பால்-ரோஸ் வாட்டர்: இது சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

தேவையானவை:

பால் – 2 டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 6 சொட்டு
புனல் -1
ஸ்பிரே பாட்டில் -1

செய்முறை: ஸ்பிரே பாட்டிலின் வாய் பகுதியில் புனலை வைத்துவிட்டு பாலையும், ரோஸ் வாட்டரையும் ஊற்றவும். பின்பு பாட்டிலை நன்றாக குலுக்கி, பாலும், ரோஸ்வாட்டரும் நன்றாக கலந்திருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளவும். பின்பு முகத்தில் தெளித்து சிறிது நேரம் கழித்து நீரில் கழுவி விடவும்.

முட்டை-பால்: வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும், பிரகாசமான மற்றும் இளமையான தோற்றத்தை தக்கவைக்கவும் இந்த ‘பேஸ் பேக்’ உதவும்.

தேவையானவை:

முட்டை-1
பால் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் கிண்ணத்தில் பிரித்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் பாலை கலக்கவும். அதில் தூரிகையை முக்கி முகத்தில் தடவவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.

இந்த பொருட்கள் அனைத்தும் இயற்கையானவை மற்றும் ரசாயனமற்றவை என்றாலும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். அதனால் முதலில் பரிசோதித்து பார்த்துவிட்டு பின்பு உபயோகிப்பது நல்லது.

சருமமும், பாலும்:

  • புரதச்சத்து நிறைந்த பாலில் அமினோ அமிலங்கள், கோலாஜன் போன்றவையும் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் சரும அழகை மேம்படுத்த உதவும்.
  • சருமத்தில் படிந்திருக்கும் கருமையை போக்கி பிரகாசமான நிறம் கொடுப்பது, சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பது, கோலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது, சுருக்கங்களை போக்கி மென்மையான சருமத்தை பேணுவது என வைட்டமின் சி சத்து சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.
  • வைட்டமின் டி சத்தில் இருக்கும் கால்சிட்ரியால் எனும் சேர்மம், சரும செல்களின் வளர்ச்சியை தூண்ட உதவும். மேலும் சருமத்திற்கு புத்துணர்வும் அளிக்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!