மன்மத நர்ஸும் அந்த 150 பேரும்… முடிவுக்கு வந்தது வழக்கு!

தேனியில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட நர்ஸின் வழக்கு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

500க்கும் மேற்பட்ட உயர் ரக ஆணுறை பாக்கெட்டுகள், 150க்கும் மேற்பட்டோருடன் உறவு… மரணத்துக்கு முன்பும் சல்லாபம்… திருமண உறவு எல்லை மீறி சென்றதால் இரு குழந்தைகளின் தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேனியை அதிர வைத்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் செல்வி (48). இவர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவரது நடவடிக்கையால் பல ஆண்டுகளுக்கு முன்பே இவரை பிறந்த இவரது கணவர் 2 குழந்தைகளுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். நர்ஸ் செல்வி பாப்பம்மாள்புரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், செல்வி பாம்பம்மாள்புரத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் செல்வியின் வீட்டில் சென்று ஆதாரங்களை சேகரித்த போது அங்கே 500க்கும் மேற்பட்ட உயர் ரக ஆணுறை பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கொலை செய்யப்படுவதற்கு முன்பு செல்வி உடலுறவில் ஈடுபட்டதற்கான அனைத்து தடயங்களும் கிடைக்கப் பெற்றன.

இந்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வந்த காவல் துறையினருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

மன்மத நர்ஸும் அந்த 150 பேரும்

செல்வியின் தொலைபேசியில் இருந்த 300க்கும் மேற்பட்ட நபர்களின் தொடர்பு எண்களை வைத்து காவல் துறையினர் ஆராய்ந்ததில் செல்விக்கு பல்வேறு நபர்களுடன் தகாத உறவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் செல்வியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 150க்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் விசாரணையில், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் , காவல்துறையினர், மருத்துவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருடன் செல்வி தொடர்பில் இருந்தது அம்பலமானது. இது தொடர்பாக அனைவரிடமும் ஆண்டிபட்டி காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்த கம்பம் அரசு மருத்துவமனை ஊழியரான ராமச்சந்திர பிரபு (34) என்பவரை அழைத்து செல்வியின் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

ஆனால் அதற்கு அடுத்த நாள் 10ஆம் தேதி உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியில் ராமச்சந்திர பிரபு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனால் போலீசாருக்கு ராமச்சந்திர பிரபு மீது சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராமச்சந்திர பிரபுவும் செல்வியும் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய போது இவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்து காலப்போக்கில் தகாத உறவாக மாறியதாகவும், இருவரும் பணி மாறுதல் பெற்றுச் சென்று விட்ட போதும் இவர்களுக்குள்ளான தொடர்பு நீடித்து வந்ததாகவும் காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி

இதனிடையே, இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்ற கடந்த மாதம் 24ஆம் தேதி பிற்பகல் 1.45 மணியளவில் ராமச்சந்திரபிரபு செல்வியின் வீட்டிற்கு வந்து சென்றதான சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதனை வைத்து ராமச்சந்திரபிரபுவின் தொடர் நடவடிக்கைகளை கண்காணித்த போது அவர் சம்பவம் நடந்த இடத்தில் பிற்பகல் ஒரு மணி முதல் 4.30 மணி வரை வீட்டில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், கோடாங்கிபட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரை உள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அந்த நேரத்தில் ராமச்சந்திர பிரபு அந்தப் பகுதியில் நடமாடியதற்கான அனைத்து சிசிடிவி ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றன. அத்துடன், அன்று மாலை 4 மணி அளவில் நர்ஸ் செல்வியின் மூன்று பவுன் தங்க செயினை பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ராமச்சந்திர பிரபு அடகு வைத்ததற்கான ஆவணங்களும் கிடைத்தன.

விசாரணை திடுக்

இதனையடுத்து நர்ஸ் செல்வியைக் கொலை செய்தது ராமச்சந்திர பிரபு தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், இதுதொடர்பாக ராமச்சந்திர பிரபுவின் மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராமச்சந்திர பிரபுவுக்கும், செல்விக்கும் தகாத உறவு இருந்ததாகவும், ராமச்சந்திர பிரபுவிடம் நர்ஸ் செல்வி பல லட்சம் ரூபாய் பணம் பெற்றிருப்பதாகவும் தெரிய வந்தது. இவற்றில் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்கையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அந்த ஆத்திரத்தில் செல்வியை ராமச்சந்திர பிரபு கொலை செய்திருக்கலாம் என்பதே கொலைக்கான காரணம் என நம்பப்படுகிறது.

மேலும், ராமச்சந்திர பிரபுவின் வங்கிக் கணக்கு வரவு செலவு விபரங்களை சரி பார்த்த போது, அவர் இதேபோல பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் அவர்களுக்கு அடிக்கடி தனது வங்கிக் கணக்கு மூலம் பணம் அனுப்பி வந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது. நர்ஸ் செல்வி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தரையில் இருந்த அவரது ரத்தத்தில் பதிவான கால் தடமும் ராமச்சந்திர பிரபுவின் கால் தடம் தான் என்பதும் தடய அறிவியல் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

காவல்துறையினர், தான்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்து விட்டார்களே என்று பயந்து போன ராமச்சந்திரபிரபு கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, செல்வியிடம் தொடர்பில் இருந்த 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அனைவரும் நர்ஸ் செல்வியுடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். காவல்துறையினரின் விசாரணைக்குச் சென்று வந்த 150க்கும் மேற்பட்டோரில் பலரது குடும்ப வாழ்வில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நர்ஸ் செல்வியை கொலை செய்த உண்மையான குற்றவாளி யார் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாலும், கடந்த 25 தினங்களுக்கும் மேலாக காவல்துறையினரையே தலை சுற்ற வைத்த இந்த வழக்கு விசாரணை ஒருவழியாக முடிவுக்கு வந்ததாலும், ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்டோரும் தற்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

தகாத பழக்கவழக்கத்தால் நர்ஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தகாத உறவை காட்டிலும் தனிமை எவ்வளவோ மேல் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே சாட்சி.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!