தொடர்ந்து முகத்தில் எண்ணெய் வழிகிறதா? அப்ப இந்த பேஸ் பேக் போடுங்க.!

இந்த பேஸ் பேக்குகளை வாரத்தில் ஓரிரு நாட்கள் பயன்படுத்தி வரலாம். எண்ணெய் பசை தன்மை கொண்ட சரும பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.

ஓட்ஸ் சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கும். சரும துளைகள் அடைபடாமல் காக்கும். தயிர், சரும புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க உதவும். தேன் அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டது. பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது சருமத்தை மென்மையாக்கும்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – தேவையான அளவு
தேன் – 2 டேபிள்ஸ்பூன்
பாதாம்- 5
தயிர்- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஓட்ஸ், பாதம் இரண்டையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அதனுடன் தேன், தயிர் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.

இந்த பேஸ் பேக்குகளை வாரத்தில் ஓரிரு நாட்கள் பயன்படுத்தி வரலாம். எண்ணெய் பசை தன்மை கொண்ட சரும பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!