கல்யாண வீடியோவை அமேசான் பிரைமிடம் இத்தனை கோடிக்கு விற்றாரா நடிகை?

பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலும், நடிகை கத்ரீனா கைஃபும் 2019ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் ஜோடியாக வெளியே வந்தாலும் காதலை உறுதி செய்யவில்லை.


இந்நிலையில் தான் அவர்களின் திருமணம் டிசம்பர் 9ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் சொகுசு ரிசார்ட்சில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. திருமணத்திற்கு 120 பேரை மட்டுமே அழைத்திருக்கிறார்கள்.

விருந்தினர் யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை. திருமணம் நடக்கவிருக்கும் ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் புகைப்படம் எடுக்கவோ, அதை வெளியிடவோ அனுமதி இல்லை. இந்நிலையில் தங்களின் திருமண வீடியோ உரிமையை அமேசான் பிரைம் வீடியோவிடம் ரூ. 80 கோடிக்கு விற்றுவிட்டார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் கணவன், மனைவியான பிறகு ஜோடியாக இரண்டு பெரிய பிராண்டுகளின் விளம்பரத்தில் நடிக்கிவிருக்கிறார்களாம்.

அமேசான் பிரைம் குறித்து அறிந்த ரசிகர்களோ, நான் என் திருமண வீடியோவை ஹாட்ஸ்டாரிடம் ரூ. 120 கோடிக்கு விற்றுவிட்டேன், நெட்ஃப்ளிக்ஸிடம் ரூ. 100 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறேன் என்று ட்வீட் போட்டு கத்ரீனா மற்றும் விக்கியை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!