மினி லாரியை வீதியில் விரட்டிய பசு… நடந்தது என்ன?


காயம்பட்ட கன்றுவை ஏற்றிச்சென்ற லாரியை விரட்டிய தாய் பசு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. வடக்கு கர்நாடக மாநிலத்தில் ஹவேரி என்ற ஊரில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது பசுமாட்டை செல்லமாக வளர்த்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு அந்த பசு, கன்று போட்டது. சமீபத்தில் கன்று விளையாடும்போது கீழே விழுந்து காயம்பட்டது. அதனால் எழுந்து நடக்க முடியவில்லை. கன்றுவின் வேதனையை விவசாயி மட்டுமல்ல தாய் பசுவும் பார்த்து துடித்தது.


இதையடுத்து விவசாயி கன்றுகுட்டியை ஒரு மினி லாரியில் தூக்கிப்போட்டு அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். இதைபார்த்த தாய்ப் பசுவும் லாரியை பின் தொடர்ந்து ஓடியது. லாரி வேகமாக சென்றபோது பசுவும் வேகமாக ஓடியது.

அரை கி.மீ. தூரத்துக்கு ஆஸ்பத்திரி வரை கூடவே சென்றது. இந்த காட்சியை சாலையில் சென்ற அனைவரும் பார்த்து நெகிழ்ந்துபோனார்கள். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. – Source: dailythanthi.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!