தண்ணீர் எவ்வளவு சென்றாலும் நிரம்பாத அதிசய கிணறு!

எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத அந்த அதிசய கிணறுகளை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு அணை நிரம்பியதால், அதன் இடது, வலதுபுற கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது. இடதுபுற கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் ஆயன்குளம் படுகைக்கு தண்ணீர் வந்து நிரம்பியது. தொடர்ந்து தண்ணீரானது ஆனைகுடி படுகைக்கும், அதன் அருகில் உள்ள 2 கிணறுகளுக்குள்ளும் பாய்ந்தோடுகிறது. வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்த கிணறுகளுக்கு பல மாதங்கள் தண்ணீர் சென்றாலும் நிரம்பியதில்லை.

இந்த கிணறுகளுக்கு தண்ணீர் செல்வதின் மூலம் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத அந்த அதிசய கிணறுகளை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு அந்த கிணற்றுக்கு சென்று பார்வையிட்டார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!