வேகமெடுக்கும் டெல்டா வைரஸ் – ஜெர்மனியில் 50 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு!

கடந்த சில வாரங்களாக ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உருமாறிய டெல்டா வைரஸ்தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

சீனாவின் வுகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 934 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இத்துடன் சேர்த்து அந்த நாட்டில் இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 38 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 35 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதுவரை அங்கு 98 ஆயிரத்து 194 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து 44.77 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து உள்ளனர். 4.62 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!