நடிகை மீனாவை கவர்ந்த பத்து படங்கள்!



நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர். அவர் அறிமுகமான படத்தின் பெயர், ‘நெஞ்சங்கள்.’ ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்த படம், இது. நடிகர் விஜயகுமாரின் சொந்த தயாரிப்பு. 1982-ல் திரைக்கு வந்தது.

100 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் மீனா, அவர் நடித்து அவரை கவர்ந்த 10 படங்களை இங்கே பட்டியலிடுகிறார். அந்த படங்கள் வருமாறு:-

  1. சீதாராமய்யகாரு மனவராலு (தெலுங்கு): இந்த படத்தில் நான் நாகேஸ்வரராவுக்கு பேத்தியாக நடித்து இருந்தேன். மிக சிறந்த கதையம்சம் கொண்ட படம். அதில் எனக்கு மிக நல்ல பெயர் கிடைத்தது. தெலுங்கு பட உலகில் எனக்கு உறுதியான அஸ்திவாரம் போட்ட படம்.
  2. எஜமான்: இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அதில் நான் ஏற்று நடித்த ‘வைத்தீஸ்வரி’ கதாபாத்திரம் பெரிய பெயரையும், புகழையும் பெற்று தரும் என்று எதிர்பார்க்கவில்லை.
  3. சண்டி: ‘சின்ன தம்பி’ படத்தின் தெலுங்கு பதிப்பு, இது. என் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு போன படம், இது.
  4. ரிதம்: இதில் நான் ஏற்று நடித்த சித்ரா கதாபாத்திரம், மிக கனமானது. நான் ரசித்து செய்தேன். என்னை சிறந்த நடிகை என்று அடையாளம் காட்டியது.
  5. ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி: ரொம்ப நல்ல படம். நான், பாக்யராஜின் ரசிகை. இந்த படத்தில், லட்சுமி என்ற கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது.
  6. பாரதி கண்ணம்மா: மிக சிறந்த கதையம்சம் கொண்ட படம். உச்சக்கட்ட காட்சியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
  7. திரிஷ்யம்: பொதுவாகவே ஒரு நடிகைக்கு திருமணமாகி விட்டால், வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். அதனால் நமக்கும் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்து இருந்தேன். அந்த நேரத்தில் வந்த படம், இது. திருமணம் செய்த நடிகைக்கு மார்க்கெட் போய்விடும் என்ற என் எண்ணத்தை மாற்றியது.
  8. ஸ்வாதி முத்து (கன்னடம்) : நல்ல கதையம்சம் உள்ள படம். நடிப்புக்காக எனக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.
  9. என் ராசாவின் மனசிலே: இந்த படத்தில், என் வயதுக்கு மீறிய கதாபாத்திரம்.

கர்ப்பிணி பெண்ணாக நடித்தபோது அசவுகரியமாக அமைந்தது. ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும்? என்று ராஜ்கிரண் சொல்லிக் கொடுத்தார்.

  1. பிரசிடென்ட் காரு பெல்லம் (தெலுங்கு): ஆணவம் பிடித்த ஒரு பெண் எப்படி நல்லவளாக மாறுகிறாள்? என்பதே இந்த படத்தின் கதை.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!