கொரோனாவுக்கு தடுப்பு மாத்திரை – இங்கிலாந்து பெருமிதம்!

இங்கிலாந்து நாட்டில் 92 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். 1.40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் 220 நாடுகளுக்குமேல் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையிலும், வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

இங்கிலாந்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது பிரிவினரில் 86 சதவீதத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 79 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தடுப்பூசியை விட மாத்திரை தயாரிப்பது எளிது என்பதால், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, இங்கிலாந்து சுகாதாரத் துறை செயலாளர் சஜித் ஜாவித் கூறுகையில், பலவீனமான மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை ஒரு கேம்சேஞ்சர். இன்று நம் நாட்டிற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். ஏனெனில் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மாத்திரையை அங்கீகரித்துள்ள முதல் நாடு இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!