மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் 19 பேர் பலி – ஆப்கானிஸ்தானில் சோகம்!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் வெளியேறியதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே நேற்று அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடும் நடந்தது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கு இடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!