பெண்களின் திருமண வயதும்.. குழந்தை பாக்கியமும்.!

திருமண வயதை தள்ளிப்போடுவது பெண்களுக்குத்தான் பாதகமானது. வயது அதிகரிக்கும்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை பெறுவதற்கான சூழல் குறைய தொடங்கிவிடும்.


படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலையில் சேர்ந்து, ஓரளவு செட்டிலான பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மன நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி திருமண வயதை தள்ளிப்போடுவது பெண்களுக்குத்தான் பாதகமானது. வயது அதிகரிக்கும்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை பெறுவதற்கான சூழல் குறைய தொடங்கிவிடும்.

வயது அதிகரிப்பு கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?

20 வயதுகளின் ஆரம்ப காலகட்டம் குழந்தை பேறுக்கு ஏற்றது. அந்த சமயத்தில் கருத்தரிப்பில் சிக்கல்கள் ஏற்படாது. ஆனால் 30 வயதை நெருங்கும்போது கர்ப்பம் தரிக்கும் திறன் குறைய தொடங்கிவிடும். 35 வயதை கடக்கும்போது கருவுறுதல் திறன் வேகமாக குறைய தொடங்கும். 45 வயதுக்கு பிறகு பெரும்பாலான பெண்களுக்கு இயற்கையாக கர்ப்பம் தரிக்கும் திறன் சாத்தியமில்லை.

கரு முட்டைகள் எத்தகைய பாதிப்புகளை அடையும்?

பெண்கள் பருவமடையும்போது கருப்பையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகள் நிறைந்திருக்கும். வயது அதிகரிக்க, அதிகரிக்க கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கும். மேலும் பெண்களுக்கு வயதாகும்போது, ​​கருப்பை கட்டிகள் மற்றும் எண்டோமெட்ரியசிஸ் போன்ற கருவுறுதலை பாதிக்கக்கூடிய பாதிப்புகள் உண்டாகக் கூடும்.

வயதாகும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைவதற்கு காரணம் என்ன?

20 முதல் 30 வயதுடைய தம்பதியரில் மாதவிடாய் சுழற்சியின்போது 4-ல் 1 பெண் கர்ப்ப மடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 40 வயதை நெருங்கும்போது மாதவிடாய் சுழற்சியில் 10 பெண்களில் ஒருவர் தான் கர்ப்பமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. வயதுக்கு ஏற்ப கருவுறுதல் திறன் குறைந்துவிடுகிறது.

தாமதமாக கர்ப்பமடைவதால் பாதிப்பு நேருமா?

குறிப்பிட்ட வயதை கடந்து தாமதமாக கர்ப்பமாகும்போது ஒருசில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக 40 வயதை கடக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்தும் பிரீக்ளாம்ப்சியா எனப்படும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகக்கூடும். இளம் பெண்களை விட வயதான பெண்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வயதானவர் களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்த பிரச் சினைதான் பாதிப்பை அதிகப்படுத்தக்கூடும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!