மத்தல விமான நிலையத்திற்கு இந்தியாவுடன் இணைந்தால் மட்டுமே புதுவாழ்வு…!


மத்தல விமான நிலையத்தை, கூட்டு முயற்சியாக, அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து அதிகார சபையுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது.

சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதனைத் தெரிவித்துள்ளார்.

“மத்தல விமான நிலையத்தை இந்தியாவின் விமான போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்து கூட்டு முயற்சியாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, கூட்டு அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த திட்டத்தில் பங்காளராக இணைந்து கொண்டால், மாத்திரமே இந்தத் திட்டம் பொருளாதார ரீதியாக சாத்தியமாகும். இதுதொடர்பான உடன்பாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் இறுதிப்படுத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். – Source: puthinappalakai.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!