சமூக வலைத்தளத்தில் மாஸ் காட்டும் அண்ணாத்த டிரைலர்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர். ஆயுத பூஜையை முன்னிட்டு அண்ணாத்த டீசரை வெளியிட்டனர். இன்று அண்ணாத்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் ரஜினி, கல்கத்தாவிற்கே காப்பு கட்டிட்டேன் என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த டிரைலர் வைரலாகி, டிரெண்டாகி வருகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!