சாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்!

அமெரிக்காவில் பிரேசில் அதிபர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவரை ஊழியர்கள் உணவு விடுதிக்குள் நுழைய அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனையடுத்து சாலையோர உணவகத்தில் அவர் உணவருந்தினார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரேசில் அதிபர் போல்சனேரோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதிக்குள் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டு சாலையோர உணவகத்தில் உணவருந்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ, தன் சக மந்திரிகளுடன் சேர்ந்து இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார்.

அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழை கேட்டுள்ளனர். அதற்கு அவர் தடுப்பூசி இன்னும் செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போல்சனேரோ உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென நியூயார்க் மேயர் பில் டே பலசியோ அறிவுறுத்தி உள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!