பயணிகளை கீழே இறங்க வைக்க ஏ.சி.யை ஆஃப் செய்த பாக். விமான நிறுவனம்


ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமானநிலையத்தில் இருந்து பாகிஸ்தானின் ரஹிம் யார் கான் விமானநிலையத்திற்கு பாகிஸ்தான் சர்வதேச விமானநிலையத்தின் பயணிகள் விமானம் நேற்று வந்துள்ளது. அந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்த சிறிது நேரத்தில் வெளிச்சம் குறைபாடு காரணமாக லாகூர் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த விமானத்தில் இருந்தவர்களை இறங்குமாறு கூறிய விமானிகள், லாகூரில் இருந்து ரஹிம் யார் கான் நகருக்கு பேருந்து மூலம் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். லாகூர் நகருக்கும் ரஹிம் யார் கான் நகருக்கும் இடையேயான தூரம் 624.5 கிலோமீட்டராகும். எனவே பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க மறுத்துள்ளனர்.


மேலும் தங்களை முல்தான் நகர விமானநிலையத்தில் இறக்கி விடுமாறு விமான நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து அந்த விமானித்தின் ஏ.சி.யை விமானிகள் அணைத்துள்ளர். இதன் காரணமாக விமானத்தில் இருந்த குழந்தைகள் உட்பட பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இவ்விவகராம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!