நேற்று வவுனியாவில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…!


அடுத்தமாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நேற்று வவுனியாவில் வெளியிடப்பட்டது.


வவுனியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பணியகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில், இந்த தேர்தல் அறிக்கையை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்தார். அதையடுத்து, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இரா.சம்பந்தன், தேர்தல் அறிக்கைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ செயலர் என்.சிறீகாந்தா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை 15 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. – Source: puthinappalakai.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!