என் மகனின் சாவுதான் கடைசி சாவாக இருக்க வேண்டும். இறந்த மாணவரின் தந்தை உருக்கம்..!

‘நீட்’ தேர்வு ரத்து அறிவிப்பையும் நிறைவேற்றி இருந்தால் என்னுடைய மகன் இறந்து இருக்கமாட்டான் என தனுசின் தந்தை கூறியுள்ளார்.

‘நீட்’ தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்த மாணவர் தனுஷ் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அதன்பிறகு அவருடைய தந்தை சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது கூறிய அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். ‘நீட்’ தேர்வு ரத்து அறிவிப்பையும் நிறைவேற்றி இருந்தால் என்னுடைய மகன் இறந்து இருக்கமாட்டான். தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘நீட்’ தேர்வுக்கு எதிராக என்னுடைய மகனின் சாவுதான் கடைசி சாவாக இருக்க வேண்டும்.

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ படிப்பில் ேதால்வி அடைந்தால் வேறு ஒரு துறையை தேர்வு செய்து வாழ வேண்டும். அதை விட்டு விட்டு மாணவர்கள் என்னுடைய மகனை போன்று ஒரு துயர முடிவை எடுக்கக்கூடாது. ஏழ்மை நிலையில் உள்ள எங்களது குடும்ப நலன் கருதி குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!