கூட்டம் கூட்டமாக பாலைவனம் வழியாக தப்பி செல்லும் ஆப்கானிஸ்தான் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலைவனம் வழியாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைப் பிடித்ததால் உயிருக்கு பயந்துள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டு எல்லையைக் கடந்து பாகிஸ்தானில் உள்ள நிம்ரூஸ் பாலைவனம் வழியாக ஈரான் நாட்டுக்கு தப்பி செல்கின்றனர்.இங்கிருந்து அவர்கள் ஐரோப்பா செல்லலாம் என கூறப்படுகிறது.இந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, அவர்களின் ஆரம்ப இலக்கு துருக்கியாக இருக்கலாம் ஆனால் ஆயிரகணக்கான மயிலகளுக்கு அப்பால் ஈரான் உள்ளது

பாலைவனங்கள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தானின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமான பாலைவனமான நிம்ரூஸில் இருந்தே இந்த பயணங்கல் தொடங்குகிறது

கண்ணுக்கு எட்டியவரை மனிதத் தலைகளே தென்படுவதால் இதனைப் பேரவலம் என்று ஐரோப்பிய எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!