ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி திடீர் மரணம்..!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமி என்கிற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!