சாதாரண சருமம் உள்ளவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பேஸ் பேக்!

எந்தவிதமான பிரச்சனையும் இல்லாத சூப்பரான சருமம் இது. தரமான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பாதிப்பு ஏற்படாமல், அழகைக் கூட்டலாம்.

சருமத்தை சுத்தம் செய்வது என்பது அன்றாடம் செய்யும் செயல்களில் இன்றியமையாதது. அப்படி சுத்தம் செய்யும் போது சாதாரணமாக முகத்தை மட்டும் தான் கழுவுவோம். இல்லையெனில் சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவோம். ஆனால் அப்படி கழுவுவது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. ஏனெனில் சருமத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் தொல்லை தரக்கூடிய சருமம் தான் எண்ணெய் பசை சருமம் மற்றும் வறட்சியான சருமம்.

இத்தகைய சருமத்தினருக்காக கடைகளில் பல அழகு சாதன பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் சாதாரண சருமம் உள்ளவர்களுக்காக என்று எதுவும் விற்பதில்லை. இதனால் சாதாரண சருமம் உள்ளவர்கள், எதை பயன்படுத்துவது என்று தெரியாமல், மற்ற சருமத்தினருக்காக தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

  • காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
  • உலர்ந்த திராட்சையின் தோல் நீக்கி, உதட்டின் மீது தடவி வந்தால், உதடுகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
  • குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைப் பராமரிக்க, சோப்பிற்குப் பதிலாகக் கடலை மாவைப் பயன்படுத்தலாம்.
  • பொதுவான பிரச்சனை உதடு வெடிப்பு. சிறந்த பெட்ரோலியம் ஜெல்லை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லுக்குப் பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதுடன், கூடுதல் மென்மையும் கிடைக்கும்.
  • குளிர்காலத்தில் மாய்ஸ்ச்சரைசர்கள் மற்றும் க்ரீம்கள் தடவி, சரும பொலிவைத் தக்கவைக்கலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!