கர்ப்ப கால நீரிழிவு… பிரசவத்தின் போது ஏற்படுத்தும் விளைவுகள்..!

குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? என்பதை தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள்.

  • கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.
  • நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்… தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.
  • குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு
  • சிசேரியன் செய்ய வேண்டிய நிலை
  • எடை கூடுதல்
  • உயர் ரத்த அழுத்தம்
  • கரு கலைதல்
  • மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்
  • டைப் – 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்
  • வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்
  • ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்
  • நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்… சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்
  • கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்
  • கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

கருவில் ஏற்படும் பிரச்னைகள்

  • பிறப்புநிலைக் கோளாறுகள்
  • பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு
  • மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.
  • மஞ்சள் காமாலை
  • ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)
  • பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்
  • குறைப் பிரசவம்
  • Hyaline membrane எனும் நுரையீரல் நோய்
  • மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!