8 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த குடும்பம்… சேர்த்து வைத்த காவல்துறை..!

எட்டு ஆண்டுகாலமாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்து வாழ்ந்த ஒரு பெண் தற்போது மீண்டும் குடும்பத்தோடு இணைந்துள்ளார். சொத்து பிரச்சினையால் குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்ணை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்து வைத்துள்ளனர் காவல்துறையினர். தன்னை குடும்பத்தோடு சேர்த்து வைத்த அனைவருக்கும் நெகிழ்ச்சியோடு நன்றி கூறியுள்ளார் அந்த பெண்.

பல ஆண்டுகாலமாக பிரிந்திருந்த குடும்பத்தினரோடு இணைந்த மகிழ்ச்சி அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்தது. ஜெயந்தி மாலா பட்டப்படிப்பு படித்தவர். தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது பெயர் கோவிந்தசாமி. ரயில்வேயிலும் பணியாற்றியுள்ளார். அம்மா பிரேமா. அப்பாவின் பென்சனில்தான் குடும்பம் நடைபெறுகிறது.

8 வருடங்களுக்கு முன்பு தனது குடும்த்தினரால் சொத்து பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதுவரை திருமணமாகவில்லை. கீழே விழுந்ததில் காதில் அடிபட்டு காது கேட்காமல் போய் விட்டது. பல்லில் அடிபட்டு விட்டது. 8 வருடமாக குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்தார்.

குடும்பத்துடன் இணைந்து வாழ சேர்ந்து வாழ போராடியுள்ளார். பல இடங்களில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை மீண்டும் முதல்வர் செல்லில் புகார் அளித்தார். அந்த புகார் K6TP சத்திரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சகிதம் ஜெயந்திமாலாவின் தாய் மற்றும் சகோதரிகள் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெயந்திமாலாவை ஏற்றுக்கொள்ள தாயாரும் சகோதரிகளும் மறுத்து விட்டனர். 3 மணிநேரம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஜெயந்தி மாலாவை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயந்திமாலா தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்து விட்டதால் இன்று அவர் தனது குடும்பத்துடன் காவல்நிலையம் வந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தும், காவல்துறைக்கும், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதல்வருக்கும் மனதார நன்றி தெரிவித்தார். மன நிறைவோடும் மகிழ்ச்சியோடு நன்றி கூறினார் ஜெயந்திமாலா.- source: oneindia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!