அமெரிக்க படை வெளியேற கெடு நீட்டிப்பு கிடையாது – தலீபான்கள் திட்டவட்டம்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் உரிமை பறிக்கப்படும், மனித உரிமை மீறல் ஏற்படும் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் முழுமையாக வெளியேறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறியதாவது:

அமெரிக்கப் படைகள் வெளியேற கெடுவை நீட்டிக்க மாட்டோம். ஆகஸ்டு 31-ம் தேதிக்குள், அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்றும் பணியை முடிக்க வேண்டும்.

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கும், தலிபான்களுக்கும் இடையே சந்திப்பு நடந்ததா என்று எனக்கு தெரியாது. நாட்டில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. விமான நிலையத்தில்தான் குழப்பம் நிலவுகிறது என தெரிவித்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!