தலீபான்களின் புதிய ஆட்சிக்கு அஷ்ரப் கானியின் சகோதரர் ஆதரவு!

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு ஆதரவளிப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானியின் சகோதரர் ஹஷ்மத் கனி அகமதுசாய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, அங்கு தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையிலான போரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலீபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.

இதனால் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலீபான்கள் வசமானது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு குடும்பத்துடன் தப்பி ஓடினார். அமீரகத்தில் அவர் தஞ்சம் அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் சகோதரர் ஹஷ்மத் கனி அகமதுசாய், தலீபான்களின் தலைவர் கலீல்-உர்-ரஹ்மான் மற்றும் மதத் தலைவர் முஃப்தி மஹ்மூத் ஜாகிர் முன்னிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!