இணையத்தில் வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படம்!

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் என அனைத்திலும் பங்கேற்று இருக்கிறார். கடந்த 2003-ம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரம்யா, அதன் பிறகு தொலைக்காட்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் சினிமாவில் குணச்சித்திரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வந்தார்.

தற்போது ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ரம்யா கிருஷ்ணனை வியந்து பாராட்டி வருகிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!