தளபதி பட நடிகையின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!