கொழுகொழுவென்று கன்னம் இருக்க வேண்டுமென ஆசைப்படுபவர்கள் இத முதல்ல படிங்க…!


கன்னம் கொழுகொழுவென்று இருக்க வேண்டுமென ஆசைப்படாத ஆள் யாராவது இருப்பார்களா என்ன?… உடம்பு ஒல்லியாக இருந்தாலும் கன்னம் மட்டுமாவது கொழுகொழுவென இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.

ஆனால் ஒரு சிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இன்னும் சிலருக்கு கன்னத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும். அதனாலும் முக அழகு கெடும். இதுபோன்ற பிரச்னைகளை கெமிக்கல் பயன்படுத்தாமல் இயற்கை வழிகளில் எவ்வாறு சரிசெய்யலாம்?…

தினமும் அதிகாலையில் எழுந்து இயற்கையாக கிடைக்கும் சுத்தமான காற்றை சுவாசித்தாலே, முகத்தில் ஒருவித புத்துணர்ச்சி மற்றும் பொலிவுகள் மின்னும்.

மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து 10 நிமிடங்கள் வாய்க்குள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்வதால் கன்னம் அழகாகும்.
சந்தனம், மஞ்சள் ஆகிய இரண்டையும் பொடி செய்து, முகத்தில் தடவி வந்தால், முகம் நல்ல பூரிப்புடன் ஜொலிக்கும்.


வறண்ட சருமம் உள்ளவர்கள், பால் மற்றும் வெண்ணெய் இரண்டையும் முகத்தில் கலந்து முகம், கை, கால்களில் தடவி வந்தால், சருமத்தின் ஈரப்பதம் அதிகரிக்கும்.

எண்ணெய்ப்பசை அதிகம் உள்ள சருமமாக இருந்தால், வெள்ளரிக்காய் ஜூஸ், லெமன் ஜூஸ், தக்காளி ஜூஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சிறிதளவு தேன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.

முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள், வேப்பமரப் பட்டை, மஞ்சள், வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு மற்றும் தழும்புகள் மறையும்.

துளசி சாறை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பரு தொல்லைகள் ஏற்படாது.

முகம் மற்றும் தேவையில்லாத இடத்தில் ரோமம் இருந்தால், அதற்கு சிறிது மஞ்சளைக் குழைத்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர, விரைவில் பலன் கிடைக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!