ஆட்சியை கைப்பற்றியது தலிபான்கள்.. ஆப்கானிஸ்தான் அதிபர் வெளியேறினார்..!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால், பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்குள் நுழைந்த நிலையில் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.
இந்நிலையில், அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபுலை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய நிலையில் அதிபர் அஷ்ரப் கனி, தஜிகிஸ்தான் சென்றுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காபுல் சுற்றி வளைக்கப்பட்டதால் விமானம் மூலம் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசுப்படைகள் சரணடைந்தால் உரிய பாதுகாப்பு தருவதாக தலிபான்கள் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!